மார்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளாவிற்க்கு கடத்திய 2 டன்ரேசன் அரிசி பறிமுதல்
- வட்டவழங்கல் அதிகாரி அதிரடி
- ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்னை உள்ளிட்ட பொருள்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரி:
தமிழக-கேரள எல்லைப்பகுதி வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்னை உள்ளிட்ட பொருள்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார் கொண்ட குழு எருதூர்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் சென்று விட்டார். தொடர்ந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வைத்து காரை மடக்கி பிடித்தனர்.
ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்தபோது சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.
தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.