உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தீபாவளியன்று நடந்த விபத்துகளில் 30 பேர் காயம்

Published On 2023-11-13 08:29 GMT   |   Update On 2023-11-13 08:29 GMT
  • குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது புகார்
  • கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் நடந்துள்ளது. நாகர்கோவில் சப்-டிவிஷனலுக்குட்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த வர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களில் சேர்க்கப்பட்டுள்ள னர். தீபாவளியன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடந்த விபத்துகளில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக விபத்துகளில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.

நாகர்கோவில் மாநகர பகுதியில் வடசேரி, நேசமணி நகர், கோட்டார், ஆசாரிப்பள்ளம் பகுதியில் தீபாவளி பண்டிகையை யொட்டி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். தகராறில் ஈடுபட்டு காயமடைந்தவர்களில் ஒரு சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச் சையில் உள்ளனர். இதேபோல் கன்னியா குமரி சப்-டிவிசனலுக் குட்பட்ட பகுதியிலும் குடி போதையில் வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குளச்சல், தக்கலை பகுதியிலும் குடி போதையில் மோதலில் ஈடுபட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News