உள்ளூர் செய்திகள்

பறக்கை சந்திப்பு சாலையில் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கார்

Published On 2023-07-19 11:26 GMT   |   Update On 2023-07-19 11:26 GMT
  • ஆம்புலன்ஸ்-சரக்கு வாகனம் மோதியதில் போக்குவரத்து கடும் பாதிப்பு
  • காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார்.

கன்னியாகுமரி:

நாகர்கோவில் பறக்கை சந்திப்பு சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார். அந்த கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து திடீரென ரோட்டில் தாறுமாறாக ஓடியது.

அது ரோட்டோரம் நிறுத் தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியது. இதில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. கார் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் நின்ற மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஒழுகினசேரி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் சரக்கு வாகனத்தின் டயரும் ஆம்புலன்சின் டயரும் பலத்த சத்தத்துடன் வெடித்தது. விபத்தில் சிக்கிய இருவாகனங்களும் நடுரோட்டில் நின்றது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலை மையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News