குலசேகரம் அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து
- தரம் பிரிக்கும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வைப்பது வழக்கம்.
- இரவு 1 மணி வரை போராடி தீயனைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட திருநந்திக்கரையில் சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியில் திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து இந்த பகுதியில் கொட்டி வைத்து பிளாஸ்டிக் குப்பை, மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து எடுத்து செல்கிறார்கள்.
தினமும் தரம் பிரிக்கும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வைப்பது வழக்கம். இந்த பகுதியில் வேறு கடைகள் எதுவும் இல்லை. இதனால் குப்பைகள் மட்டும் ஒரு பகுதியில் சேகரிக்கப்பட்டு வந்தனர். நேற்று இரவு அந்த பகுதியில் இருந்து திடீரென தீ மளமளவென எரிந்தது. உடனே அந்த பகுதியில் உள்ளவர்கள் திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன்.ரவி, துணை தலைவர் ஸ்டாலின்தாஸ் ஆகி யோர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இது குறித்து குலசேகரம் தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்த்து அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு 1 மணி வரை போராடி தீயனைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
குலசேகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீ எவ்வாறு பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கன்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.