ஆசாரிபள்ளத்தில் ஓடும் பஸ்சிலிருந்து இறங்கிய முதியவர் தவறி விழுந்து பலி
- போலீசார் விசாரணை
- எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த ஷேக் முகமது பலத்த காயமடைந்தார்.
கன்னியாகுமரி,
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 55). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் பஸ்சில் பயணம் செய்தார்.
பஸ் ஆசாரிபள்ளம் பகுதியில் சென்று கொண்டி ருந்தபோது ஷேக் முகமது ஓடும் பஸ்சிலிருந்து கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த ஷேக் முகமது பலத்த காயமடைந்தார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஷேக் முகமது பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண் டார்.
முதற்கட்ட விசாரணை யில் ஷேக் முகமதுவிற்கு வலிப்பு நோய் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வலிப்பு வரும்போது அங்கும் இங்குமாக ஓடுவது வழக்கம். சம்பவத்தன்று பஸ்சில் சென்று கொண்டிருந்த போது ஷேக் முகமதுவுக்கு வலிப்பு நோய் வந்துள்ளது. அப்போது பஸ்சிலிருந்து அங்கும் இங்குமாக ஓடிய ஷேக் முகமது ஓடும் பஸ்சிலிருந்து இறங்கிய போது தவறி விழுந்து பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
பலியான ஷேக் முகமது வின் உடல் பிரேத பரி சோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராள மானோர் அங்கு திரண்டு உள்ளனர்.