உள்ளூர் செய்திகள்

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-10-05 08:02 GMT   |   Update On 2023-10-05 08:02 GMT
  • கலெக்டர் தகவல்
  • தமிழ் வளர்ச்சித்துறையால் 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் ஆர்வலர் களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித்துறையால் 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் 'தமிழ்ச் செம்மல்' விருதும், விருதாளர்கள் ஒவ்வொரு வருக்கும் விருது தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், கன்னியா குமரி மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமி ருந்து 2023-ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் www. tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை உரியவாறு நிறைவு செய்து, தன்விவ ரக்குறிப்பு, நூல்கள் அல்லது கட்டுரை வெளியிட்டு இருந்தால் அது தொடர்பான விவரங்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந் தால் அது தொடர்பான விவரம், தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் 2 நிழற்படங்கள், ஆற்றிய தமிழ் பணிக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து கன்னியாகுமரி மாவட்டத்தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 5-10-2023-ம் நாளுக்குள் கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 'தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கன்னியாகுமரி மாவட்டம், (இ) நாகர்கோவில். (தொலை பேசி எண். 04652-234508 என்ற முகவரிக்கு நேரில் அல்லது தொலை பேசி வாயிலாக தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News