உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 235 இடங்களில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-21 10:36 GMT   |   Update On 2023-07-21 10:36 GMT
  • மாவட்ட தலைவர் தர்மராஜ் அறிக்கை
  • 23-ந்தேதி காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், மணல் மற்றும் கனிம கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், விலை வாசிகளை கட்டுப்படுத்த வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி வார்டு பகுதிகளிலும் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகள் என மொத்தம் 235 இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த கிளை பொறுப்பாளர்கள் அணி மற்றும் பிரிவுகளின் பிரதிநிதிகள், ஒன்றிய, நகர, மாவட்ட, மாநில மற்றும் தேசிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News