உள்ளூர் செய்திகள்

கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்ட காட்சி.

திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.71.69 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்

Published On 2023-04-14 08:33 GMT   |   Update On 2023-04-14 08:33 GMT
  • கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு
  • பொதுமக்களின் தேவைக் கேற்ப வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட ஏற்றக்கோடு மற்றும் குமரன்குடி ஊராட்சி பகுதிகளில் முடிவுற்ற மற்றும் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைப்பது, நீர் நிலைகளை தூர்வாருவது, குடிநீர் வசதி உள்ளிட்ட பொதுமக்களின் தேவைக் கேற்ப வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட குளச்சல் திருவட்டார் சாலை முதல் கட்டைக்கால் சாலை வரை தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பில் கருந்தளம் அமைக்கப்பட்டி ருந்த பணியினை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிற்றார் பட்டணக்கால் கால்வாய் முதல் கூடளாகம் வரை மகாத்மா காந்தி தேசிக ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் கால்வாய் தூர்வாரி மேம்படுத்தும் பணியினை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குமரன்குடி ஊராட்சிக் குட்பட்ட கண்ணன்கரை விளை முதல் கொல்லன் விளை சாலை வரை பத்மநா பபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.8.99 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்ட சிமெண்ட் சாலை மற்றும் கட்டி முடிக்கப் பட்ட தடுப்புச்சு வர் பணியினை யும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் வடக்கநாடு பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணி என மொத்தம் ரூ.71.69 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யசோதா, கீதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பால்சன் (குமரன்குடி), ஹெப்சிபாய் கிறிஸ்டி (ஏற்றக்கோடு), உதவி பொறியாளர்கள் சஞ்சு பொன்ராஜன், கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News