உள்ளூர் செய்திகள்

குழித்துறை ரெயில் நிலையம் அருகே ரூ.45 கோடியில் ரெயில்வே மேம்பாலம்

Published On 2023-10-05 07:50 GMT   |   Update On 2023-10-05 07:50 GMT
  • விஜய்வசந்த் எம்.பி.தகவல்
  • வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரோட்டை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

நாகர்கோவில்:

விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது:- குழித்துறை ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கிராசிங் எண் 14-ல் ரெயில் போகும் சமயங்களில கேட் நீண்ட நேரமாக அடைத்து வைப்பதின் காரணமாக இருபுறம் அதிகமான வாகன போக்குவரத்து காரணமாக நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ரோட்டை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

மேலும் தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நடைக்காவு, சூழால், விளாத்துறை, ஊரம்பு, பைங்குளம், மங்காடு, நித்திரவிளை, முன்சிறை, புதுக்கடை, ஐரேனிபுரம், கொல்லஞ்சி, காரவிளை போன்ற இடங்களில் உள்ள பொதுமக்கள் மார்த்தாண்டம் ரெயில் நிலையம் மற்றும் மார்த்தாண்டம் பஸ் நிலையம் வந்து செல்ல போக்குவரத்து நெருக்கடி காரணமாக சரியான நேரத்திற்குவர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்குள்ள மக்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் குழித்துறை ரெயில் நிலையம் அருகில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

விஜய்வசந்த் எம்.பி. ரெயில்வே அதிகாரிகளையும், ரெயில்வே அமைச்சரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பாராளுமன்றத்தில் பேசியதின் மூலமாக ரெயில்வே நிர்வாகம் அந்த இடத்தை ஆய்வு செய்து மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து முழு செலவையும் ஏற்று ரூ.45 கோடி செலவில் புதிய பாலம் அமைக்க முன்வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சீராகுவது மட்டுமல்லாது அப்பகுதி விரைவில் வளர்ச்சி பெறும். அதுபோல நீண்ட நாட்களாக விரிகோடு பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங் கேட் அடிக்கடி மூடப்படுவதால் அங்கு வசிக்கும் மக்களும், வாகன ஓட்டிகளும் மார்த்தாண்டம், நாகர்கோவில், திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டி நீண்ட நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர்.

மாற்று இடத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைத்தால் விரிகோட்டை சுற்றியுள்ள மக்கள் பள்ளி, கல்லூரி செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் பேசி முழு முயற்சி எடுத்து வருகிறேன். எனவே அப்பகுதி மக்களின் விருப்பத்தின் படி அவர்களின் கோரிக்கை ஏற்றவாறு விரிகோட்டில் விரைவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News