குலசேகரம் பகுதியில் மழை ரேசன் கடைக்குள் மழை நீர் புகுந்து
- அரிசி, சீனி மூடைகள் சேதம்
- இடிமின்னலுடன் திடீர் கோடை மழை
கன்னியாகுமரி:
குலசேகரம், பேச்சிப் பாறை, திற்பரப்பு, திருநந்திக்கரை, திருவரம்பு, திருவட்டார், பொன்மனை, மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று மாலை இடிமின்னலுடன் திடீர் கோடை மழை பெய்தது.
இந்த மழையின்போது சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் கடும் வெயில் இருந்த நிலையில் சற்று வெப்பம் குறைந்தது. குலசேகரம்-திருவரம்பு சாலையில் நாகக்கோடு சந்திப்பு அருகிலுள்ள ஒரு ரேஷன் கடைக்குள் திடீரென்று தண்ணீர் புகுந்தது. அப்போது கடையில் பணியில் இருந்த பெண் ஊழியர் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடர்ந்து சாலையில் பாய்ந்த தண்ணீர் கடைக்குள் புகுந்த வண்ணம் இருந்தது.
இது குறித்து குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸூக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களை அந்த ரேஷன் கடைக்கு அனுப்பி வைத்து, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் ஒத்து ழைப்புடன் கடையிலிருந்த ரேஷன் மற்றும் சர்க்கரை அரசி மூடைகள் அங்கிருந்து அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த ரேசன் கடையில் சுமார் 160 மூடைகள் சர்க்கரை, அரிசி மூடைகள் இருந்த நிலையில் அவற்றில் சில மூடைகள், கடையில் தண்ணீர் புகுந்த காரணத்தால் நனைந்து சேதமடைந்தன. தற்போது குலசேகரம்-திருவரம்பு சாலையில் சாலை விரிவாக்கப்பணிகள் நடப்பதால் சாலையில் பாய்ந்த தண்ணீர் ரேஷன் கடைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்து அரிசி மூடைகள் சேதமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இனிமேல் வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டு மென்று அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.