உள்ளூர் செய்திகள்
சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சுமங்கலி பூஜை
- ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்
- ஏற்பாடுகளை அந்த ஊர் தலைவர் சிவபெருமான் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
நாகர்கோவில்:
தென்தாமரைகுளம் அருகே கரும்பாட்டூர் அருகில் உள்ள சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் தேவி முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் திருமணமான பெண்கள் கலந்துகொண்டு சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமணமான சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைப்பதற்கும், தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கும் பாடல்பாடி பூஜையில் ஈடுபட்டனர். பின்னர் கொலு பொம்மைகள் வரிசையாக வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்த ஊர் தலைவர் சிவபெருமான் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.