நாகர்கோவிலில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டது ஏன்?
- உருக்கமான தகவல்கள்
- கழிவறையில் ஸ்டெபின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.
நாகர்கோவில், மே.31-
நாகர்கோவில் மேலரா மன்புதூர் எம்.ஜி.ஆர். சிலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். வெல்டிங் தொழி லாளி. இவரது மனைவி நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூத்த மகன் ஸ்டெபின் (வயது 13).
நேற்று காலையில் கணவன்-மனைவி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். மாலையில் ஸ்டெபினும் அவரது சகோதரரும் வீட்டில் இருந்தனர். அப் போது ஸ்டெபினின் சகோ தரர் வெளியே விளையாட சென்றார். வீட்டில் ஸ்டெபின் மட்டும் இருந்தார். இந்த நிலையில் இரவு ஸ்டீபன் வீட்டிற்கு வந்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இளைய மகன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மூத்த மகன் ஸ்டீபன் வீட்டுக்குள் இருப்பான் என அழைத்துள்ளார். நீண்ட நேரம் அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் ஸ்டெபின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.
இதனைப் பார்த்து பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன், நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்டெபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஸ்டெபின் தற்கொ லைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஸ்டெபின் தற்போது அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிகள் 7-ந் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அவரை விடுதி யில் சேர்க்க பெற்றோர் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவருக்கு விடுதியில் சேர்ந்து படிக்க விருப்ப மில்லாததால் மனமுடைந்து தற்கொலை செய்து இருக்க லாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பலியான ஸ்டெபின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக் கிறது. பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.