உள்ளூர் செய்திகள்

சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்


வாசுதேவநல்லூரில் கராத்தே போட்டி

Published On 2023-02-14 08:27 GMT   |   Update On 2023-02-14 08:27 GMT
  • தமிழ்நாடு மாநில கராத்தே போட்டி வாசுதேவநல்லூர் எஸ்.டி. நகரில் உள்ள எஸ்.எம்.டி. சினி மெமோரியலில் நடைபெற்றது.
  • சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

சிவகிரி:

வாசுதேவநல்லூரில் மபூனி சிட்டோ ரியோ கராத்தே இன்டர்நேஷனல் சார்பில் 8-ம் ஆண்டு சினி மெமோரியல் தமிழ்நாடு மாநில கராத்தே போட்டி வாசுதேவநல்லூர் எஸ்.டி. நகரில் உள்ள எஸ்.எம்.டி. சினி மெமோரியலில் நடைபெற்றது. கராத்தே போட்டிக்கு எஸ்.டி. கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் தவமணி வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், நகர செயலாளர் பாசறை கணேசன், கராத்தே மாஸ்டர்கள், மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குடும்பத்தின ரோடு கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கராத்தே மாஸ்டர் வீரமணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News