உள்ளூர் செய்திகள்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி- நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2023-11-02 09:08 GMT   |   Update On 2023-11-02 09:08 GMT
  • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
  • அவற்றுள் ஒன்றாக மகளிர் மேம்பாட்டில் கலைஞரின் பங்கு என்ற தலைப்பில் மகளிருக்கு பேச்சு போட்டி நடத்தப்படுகிறது.

நெல்லை:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக மகளிர் மேம்பாட்டில் கலைஞரின் பங்கு என்ற தலைப்பில் மகளிருக்கு பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள இப்போட்டியில் 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். கொடுக்கப்பட்ட தலைப்பில் 3 நிமிடங்களுக்கு மிகாமல் பேச வேண்டும். இப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கும், முன்பதிவு செய்யவும் 7502433751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரி வித்துள்ளார்.

Tags:    

Similar News