தொழிலாளர்கள் குடும்பங்களை காத்தவர் கருணாநிதி
- அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தால் பல லட்சக்கணக்கானவர்கள் நிவாரண உதவிகளை பெற்றுள்ளனர்.
- கணவரை இழந்த திவ்யாவுக்கு மாநகராட்சியில் தற்காலிக பணி ஆணை வழங்கினார்.
தஞ்சாவூர்:
தொ.மு.ச.பேரவையின் உட்பிரிவுகளின் ஒன்றான , தமிழ்நாடு மோட்டார் வாகன முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர், ஓட்டுநர் விஜய் என்ற இளைஞர் அண்மையில் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், அவரது மனைவி திவ்யாவிடம் அரசின் உதவித்தொகை ரூ.2 லட்சத்தை தொ.மு.ச. பேர வையின் அகில இந்திய பொதுச்செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் வழங்கினார்.தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது கணவரை இழந்த திவ்யாவுக்கு மாநகராட்சியில் தற்காலிக பணி வழங்கும் வகையில், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் பணி ஆணையையும் வழங்கினார்.
இது குறித்து தொ.மு.ச. பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. அளித்த பேட்டியில்:-
கருணாநிதியால் உருவாக்கப்பட்ட அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தால் பல லட்சக்கணக்கானவர்கள் நிவாரண உதவிகளை பெற்றுள்ளனர். நல வாரியத்தை தொடக்கி தொழிலாளர்களின் குடும்பங்களை காத்தவர் கருணாநிதி என்றார்.
இந்நிகழ்வில் கரந்தை பகுதி தி.மு.க செயலாளர் கார்த்திகேயன், தொ.மு.ச.மா வட்ட கவுன்சில் செயலாளர் சேவியர், உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் சாக்ரட்டீஸ், லாரன்ஸ், காதர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.