உள்ளூர் செய்திகள்

கரூரில் 135 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2023-01-03 08:34 GMT   |   Update On 2023-01-03 08:34 GMT
  • கரூரில் 135 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன
  • 72 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

கரூர்:

கரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு, சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்துள்ளதாக, கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டத்தில் கடந்த 2021ல் 20 கொலைகள் நடந்த நிலையில், கடந்தாண்டு, 14 கொலைகள் நடந்துள்ளது. அதில், ரவுடிகள் இடையிலான கொலைகள் இல்லை. மேலும், 2021 ல், 230 குற்ற வழக்குகளில், 2 கோடியே, 27 லட்சத்து, 9 ஆயிரத்து 835 ரூபாய் மதிப்பில் பொருட்கள் களவு போனது. கடந்தாண்டு, 200 குற்ற வழக்குகளில், ஒரு கோடியே, 24 லட்சத்து, 42ஆயிரத்து 275 ரூபாய் மதிப்பில் பொருட்கள் களவு போனது. கடந்தாண்டு, திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன.கரூர் மாவட்டத்தில் கடந்த 2021ல் போக்சோ சட்டத்தின் கீழ், 55 வழக்குகளும், கடந்த ஆண்டு 72 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021 ல் குண்டர் சட்டத்தில், 29 பேர் கைதான நிலையில், கடந்தாண்டு, 27 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 10 பேர் குட்கா வழக்கில் கைதானவர்கள்.கஞ்சா வழக்கில் கடந்த, 2021ல், 91.280 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்தாண்டு, 135.635 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 72 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.கடந்த 2021ல் 393 விபத்து வழக்குகளில் 413 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு 368 வழக்குகளில் 377 பேர் உயிரிழந்தனர். சாலை விழிப்புணர்வு மற்றும் தீவிர வாகன சோதனை காரணமாக கடந்த ஆண்டு விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மோட்டார் வழக்குகள் மூலம் 9 கோடியே, 81 லட்சத்து, 93 ஆயிரத்து, 558 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.குற்றத்தடுப்பு பணிக்காக காவலர் ரோந்து நவீனமய மாக்கல் முறையில், மாற்றம் செய்யப்பட்டு, இ-பீட் நடை முறை, 108 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.சைபர் குற்றப்பிரிவு மூலம் கடந்தாண்டு, 12 வழக்குகள் செய்யப்பட்டு, 53 பேரின் வங்கி கணக்குகளில், 65 லட்சத்து, 81 ஆயிரத்து, 199 ரூபாய் முடக்கப்பட்டுள் ளது. மேலும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 11 லட்சத்து, 74 ஆயிரத்து, 762 ரூபாய் மற்றும் 930 மொபைல் போன் உரியவர்களுக்கு மீட்டு கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Tags:    

Similar News