உள்ளூர் செய்திகள்
- தில்லை நகரில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தாந்தோணிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர்:
கரூர் ராயனூர் பகுதியில் உள்ள தில்லை நகரில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தாந்தோணிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினா்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தேவராஜ் (வயது 48), ராணி (47) ஆகிய 2 பேரையும்போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.