உள்ளூர் செய்திகள் (District)

1,677 மையங்களில் 32-வது தடுப்பூசி முகாம்

Published On 2022-07-23 09:27 GMT   |   Update On 2022-07-23 09:27 GMT
  • 1,677 மையங்களில் 32-வது தடுப்பூசி முகாம்
  • மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தகவல்

கரூர்:

கரூர் மாவட்டத்தில் நாளை (24-ந்) 32-வது தடுப்பூசி முகாம் 1,677 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்டத்தில் 12 -18 வயதுடைய கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளதால் அவர்களுக்கு கரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் இவ்வயதுடையவர்கள் இம்முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி வரும் செப்டம்பர் 30 வரை 75 நாட்களுக்கு இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி 2ம் தவணை தடுப்பூசி போட்ட தேதியிலிருந்து 9 மாத கால அவகாசத்திலிருந்து தற்போது 6 மாதகால அவகாசமாக குறைக்கப்பட்டுள்ளதால் இவர்களும் இத்தடுப்பூசி முகாமை பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

இதேபோல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இன்னும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி நிலுவையில் உள்ளவர்கள் மொத்தம் 43,447 பேர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுடைய நபர்கள் 5,68,757 பேர். கரூர் மாவட்டத்தி ல் உள்ள இவர்கள் அனைவரும் இம்முகாமை பயன்படுத்தி 2ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எனவே, இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டிய 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நாளை ( 24)ஜ%*ஜநடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News