முதலாமாண்டு மாணவிகளுக்கு நோக்குநிலை திட்ட விழா
- கரூர் அரசு மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம் சார்பாக முதலாமாண்டு மாணவிகளுக்கு நோக்குநிலை திட்ட விழா
- இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மாணவிகளிடம் எடுத்துரைத்தார்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்டம் சார்பாக முதலாமாண்டு மாணவிகளுக்கு நோக்குநிலை திட்ட விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை வகித்தார். தாளாளர் கோதை நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் ஷாலினி பிரியா இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.அரசு மகளிர் கல்லூரியின் துணை முதல்வர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு நாட்டு நலப்பணித் திட்ட மாணவி ஷஸ்மினாபானு வரவேற்றார். நாட்டு நலப்பணி திட்ட மாணவி பிரியா நன்றி கூறினார். நாட்டு நலப்பணி திட்ட மாணவி திவ்ய தர்ஷினி விழாவினை தொகுத்து வழங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜலிங்கம், சங்கீதா, சண்முகப்பிரியா, நந்தினி, ரம்யா, சஷ்டிகா ஆகியோர் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்தனர்.