பொதுத்தேர்வில் கடினல்வயல் அரசு பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம்
- வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
- தமிழ் வழி கல்வியில் பயின்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதிதா பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இந்த மாணவியின் தந்தை வேம்பையன், தாய் திலகா ஆகியோர் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆவர்.
மாணவியின் தந்தை வேம்பையன் தான் பணியாற்றும்கடின ல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி யிலேயே தனது மகளை சேர்த்து தமிழ் வழி கல்வியில் படிக்க வைத்து மாவட்ட அளவில் முதலிடம் பெற செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
முதலிடம் பிடித்த மாண வியை தலைமையாசிரியர் சிவகுருநாதன் சால்வை அணிவித்து பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வைரவல்லி, ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், ஜி.எச்.சி.எல். உப்பு தொழிற்சாலை மேலாளர் சுந்தர்ராஜன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் ஆகியோர் மாணவியை பாராட்டினர்.