உள்ளூர் செய்திகள் (District)

சூலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை கடத்தி தாக்குதல்-3 பேர் கைது

Published On 2023-04-14 09:45 GMT   |   Update On 2023-04-14 09:45 GMT
  • பிரவீன் பாண்டியன் சூலூர் பிரிவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
  • 3 பேர் மீது கொலை முயற்சி மற்றும் ஆள் கடத்தல் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

சூலூர்,

சூலூர் தாசில்தார் அலுவலகம் அருகே ஜி.கே.எஸ் நகரை சேர்ந்தவர் பிரவீன் பாண்டியன்.

இவர் சூலூர் பிரிவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் ஊழியராக பணி யாற்றி வருகிறார்.இவர் சம்பவத்தன்று தன்னுடன் பணிபுரியும் தனது நண்பர்களான ஹரி ஹரனுடன், சூலூர் படகுத்து றையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்தது. அவர்கள் பிரவீன் பாண்டியன் மற்றும் ஹரிஹரனிடம் பணம் கேட்டனர். அவர்கள் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், அவர்கள் 2 பேரையும் தாக்கி, ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர்.

இந்த நிலையில் வேலைக்கு சென்ற அண்ணன் வெகுநேரமாக வராததால் சந்தேகம் அடைந்த பிரவீன் பாண்டியனின் சகோதரர் மோகன பாண்டியன் அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஹரிஹரன் மற்றும் பிரவீன் பாண்டியனை ஒரு கும்பல் சூலூர் பெரிய குளம் அருகே தாக்கி கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

அப்போது அங்கு 3 பேர் கத்தி, மரக்கட்டை இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டிருந்தனர். இதையடுத்து மோகன பாண்டியன் விரைந்து சென்று, அந்த கும்பலை மடக்கி பிடித்து சூலூர் போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர்களை தாக்கியது, சிங்காநல்லூர் கள்ளிமடை காமராஜர் நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(27), பள்ளபாளையம் கன்னியாத்தா தோப்பை சேர்ந்த மணி விக்னேஷ்(20), பீளமேட்டை சேர்ந்த பாலாஜி(24) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் கொலை முயற்சி மற்றும் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News