உள்ளூர் செய்திகள்

கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி. அருகில் சண்முகையா எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

தமிழகத்தில் மக்கள் தேவை அறிந்து முதல்-அமைச்சர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2023-10-03 09:15 GMT   |   Update On 2023-10-03 09:15 GMT
  • கூட்டத்தில் முதல்-அமைச்சரின் கிராம சபை கூட்டம் குறித்த உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
  • அந்தோணியார்புரத்தில் குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட கோரிக்கைகள் உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மறவன்மடம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சித் தலைவர் லில்லி மலர் தலைமையில் நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஊராட்சி துணைத் தலைவர் பொன்வேல் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலர் சத்திய ராஜ் வரவேற்று வளர்ச்சி பணி தீர்மானங்களை நிறை வேற்றினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சரின் கிராம சபை கூட்டம் குறித்த உரை தொலைக்காட்சியின் ஒளிபரப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிய பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களின் தேவை அறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நல்லாட்சி நடத்தி வருகிறது.

தற்போது கலைஞரின் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை வழங்கப்பட்டுள்ளது. விடு பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு ஆண்டுக்கு 4 முறை நடந்து வந்த கிராம சபை கூட்டங்கள் தற்போது 2 நாட்கள் கூடுதலாக சேர்த்து ஆண்டுக்கு 6 முறை நடத்தப்பட்டு வருகிறது.

கிராமசபை கூட்டங்களில் மக்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து நிறை வேற்றப்படும். அந்தோணி யார்புரத்தில் குடிநீர், தெரு விளக்கு, நாச்சியார்புரத்தில் அங்கன்வாடி, இலவசவீடு, மயான பாதை உள்ளிட்ட கோரிக்கைகள் உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் உலக நாதன், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, வேளாண்மை இணை இயக்குனர் பால சுப்ரமணியன், கால்நடை பராமரிப்புத் துறை சஞ்சீவன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் சரஸ்வதி, சுகாதாரப் பணிகள் இயக்குனர் லிங்கம், மாவட்ட வழக்கலர் அபுல் காசிம், தாசில்தார் பிரபாகரன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச் சலம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் மாவட்ட கவுன்சிலர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார், இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டிடிசி.ராஜேந்திரன், மாநகர கவுன்சிலர் ரெங்கசாமி, ஒன்றிய தி.மு.க. செய லாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News