உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணா கல்லூரியில்தேசிய கருத்தரங்கு

Published On 2023-03-17 09:24 GMT   |   Update On 2023-03-17 09:24 GMT
  • நமது நாட்டின் பொருளாதாரம் தற்சார்பு நிறைந்ததாக வளர பாடுபட வேண்டும்.
  • தொழில் சார்ந்த கல்வியை மாணவர்கள் கற்க வேண்டும்

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூயில் கணினி மென்பொருள் உருவாக்கம் என்னும் தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.

இதற்கு கல்லூரியின் தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்லூரியின் முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.

கணினி அறிவியல் துறை தலைவர் அரவிந்தன் அனைவரையும் வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி கணினி துறை பேராசிரியர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தாளாளர் பெருமாள் பேசுகையில் மாணவர்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்பம், சர்வதேச சந்தைப்படுத்தும் திறன் ஆகியவற்றை பயன்படுத்தி நமது நாட்டின் பொருளாதாரம் தற்சார்பு நிறைந்ததாக வளர பாடுபட வேண்டும். தொழில் சார்ந்த கல்வியை மாணவர்கள் கற்க வேண்டும் என வாழ்த்தினார்.

பேராசிரியர் பிரபாகரன் பேசும் போது தகவல் தொழில் நுட்ப துறையே இந்தியாவில் பிற துறைகளை விட மிகவும் வேகமாக முன்னேற்றங்களை கண்டு வருகிறது.

இந்தியாவில் உருவாக்கப் படும் மென்பொருட்களே சர்வதேச அளவில் கல்வி துறையிலும், தொழில் துறையிலு தகவல் தொழில் நுட்ப பரிமாற்றத்திலும் பயன்பட்டு வருகிறது. நமது மாணவர்களின் நுண்ணறிவு திறனை பலர் புதிய மென்பொருட்களை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைகிறது. எனவே தான் பன்னாட்டு அறிவியல் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இன்று இந்தியர்களே பதவி வகிக்கிறார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் தொடக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 450 மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கணினி பேராசிரியர் புஷ்பலதா நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News