உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2023-05-11 08:10 GMT   |   Update On 2023-05-11 08:10 GMT
  • அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 43.15 அடியாக உள்ளது.
  • அணையின் நீர் இருப்பை 43 அடியாக குறைக்க முடிவு செய்து, கடந்த 21ம் தேதி முதல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கடந்த 5-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 496 கனஅடியாக இருந்தது.

இந்நிலையில், நேற்று நீர்வரத்து விநாடிக்கு 261 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றிலும் வினாடிக்கு 496 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 43.15 அடியாக உள்ளது. கிருஷ்ணகிரி அணையின் நீர்தேக்க பின்பகுதியில் 15 ஊராட்சிகள் பயன்பெறும், கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்காகக் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.

இப்பணிக்காக அணையின் நீர் இருப்பை 43 அடியாக குறைக்க முடிவு செய்து, கடந்த 21ம் தேதி முதல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், இத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நீர்இருப்பு குறைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வருகிற 13-ம் தேதிக்கு பின்பு மீண்டும் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News