உள்ளூர் செய்திகள்

குடமுழுக்கையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள்.

புலவஞ்சியில் நாளை மழைமாரியம்மன் கோவில் குடமுழுக்கு

Published On 2023-09-16 09:50 GMT   |   Update On 2023-09-16 09:50 GMT
  • 2, 3 மற்றும் 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.
  • நாளை காலை 9 மணிக்கு மேல் முத்து மாரியம்மனுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

மதுக்கூர்:

மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புலவஞ்சி கிழக்கு காவா குளக்கரையில் பகுதியில் அமைந்துள்ளது மழை மாரியம்மன், முத்துமாரியம்மன் கோவில்.

இந்த கோவிலில் திருப்பணி கள் மேற்கொள்ளப்பட்டு நாளை (ஞாயிற்றுகிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளன.

நாளை காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் மழை மாரியம்மனுக்கும், காலை 9 மணிக்கு மேல் 10.10 மணிக்குள் முத்து மாரியம்ம னுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

முன்னதாக இன்று நவசக்தி ஹோமமும், பூர்ணாஹீதி மற்றும் தீபாராதனை முதல் காலை யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து 2, 3 மற்றும் 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.

நாளை குடமுழுக்கு முடிந்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

இரவு 10 மணி அளவில் நாட்டுப்புற இரட்டையர்கள் திருப்பத்தூர் சேவியர், கந்தர்வகோட்டை முருகையா இணைந்து நடத்தும் திருப்பத்தூரான் கலைக்குழுவின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை புலவஞ்சி கிழக்கு கிராமவாசிகள் மற்றும் பஞ்சாயத்தார்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News