தேசிய விருது பெற்ற சீர்காழி உடற்கல்வி இயக்குனருக்கு பாராட்டு
- டெல்லி மாநகராட்சி கன்வென்ஷன் வளாகத்தில் வழங்கப்பட்டது.
- தமிழக பள்ளிக்கல்வித்துறை விருதான டாக்டர்.ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை பெற்றார்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல் நிலை பள்ளியில் 33 ஆண்டு கால பணியில் உடற்கல்வி ஆசிரியராகவும், தேசிய மாணவர் படை அதிகாரியாகவும், உடற்கல்வி இயக்குநராகவும், நாட்டு நல பணித்திட்ட அலுவலராகவும், பள்ளியின் உதவி தலைமையா சிரியராகவும் பணியாற்றி வருபவரும், சென்ற ஆண்டின் தமிழக பள்ளிக்கல்வித்துறை விருதான டாக்டர். ராதாகி ருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை பெற்ற எஸ்.முரளிதரனுக்கு இந்திய அரசின் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அகில இந்திய உடற்கல்வி அமைப்பு சார்பில் சிறந்த உடற்கல்வி இயக்குனர் மற்றும் சிறந்த பயிற்சியாளர்கான விருது புது டெல்லி மாநகராட்சி கன்வென்ஷன் வளாகத்தில் வழங்கப்பட்டது.
இவ்விருதினை அவ் வமைப்பின் அகில இந்திய நிறுவன தலைவர் டாக்டர்.பியுஷ் ஜெயின் , தமிழ்நாடு பெபி அமைப்பின் பொது செயலாளர் டாக்டர் சபரி கணேஷ் முன்னிலையில், துரோணாச்சாரியர் விருது பெற்ற சர்வதேச ஹாக்கி விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளருமான டாக்டர். ஏ.கே.பன்சல் தேசிய விருதினை சீர்காழி எஸ்.முரளிதரனுக்கு வழங்கினார்.
இவ்விருதினை பெற்ற முரளிதரனை ,பள்ளி முன்னாள் செயலர் பாலசுப்ரமணியம், எஸ்.இராமகிருஷ்ணன் பள்ளி செயலர் சொக்கலிங்கம், பள்ளி குழு தலைவர் சிதம்பரநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கபாலி, பள்ளி பழைய மாணவர் சங்க செயலர் முரளிதரன், பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி,பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் துளசி ரங்கன்,
சீனிவாசன் ,பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்தி வேல், ஹரிஹரன், ராகேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் அலுவலர்கள் பாராட்டினர்.