உள்ளூர் செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜான்சன்ஸ் நடராஜன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டிய போது எடுத்த படம்.

திருச்செங்கோட்டில் சிலம்பம், கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2022-07-07 09:23 GMT   |   Update On 2022-07-07 09:23 GMT
  • அகில இந்திய சிலம்ப போட்டியில் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக 11 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
  • இதே போல் ஓபன் கராத்தே போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அகாடமி மாணவர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு:

சேலத்தில் அகில இந்திய சிலம்ப போட்டி நடந்தது. இதில் 700 பேர் கலந்துகொண்டனர். இதே போல் ஈரோடு சிஎஸ்ஐ அரங்கத்தில் ஈரோடு ஓபன் கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அகில இந்திய சிலம்ப போட்டியில் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக 11 மாணவர்கள் கலந்துகொண்டனர். வெவ்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் சூரியா, சர்வேஷ், அபிநயா, துர்கா  முதல் பரிசையும் குமரவேலு, பாலாஜி, வெற்றிவேலன் 2-ம் பரிசையும், 4 மாணவர்கள் 3-ம் பரிசையும் வென்றனர்.

இதே போல் ஓபன் கராத்தே போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அகாடமி மாணவர்கள் 18 பேர் கலந்து கொண்டனர். இதில் பவித்ரா தேவி முதல் பரிசையும், கனிஷ்கா, சந்தோஷ் 2-ம் பரிசையும் 17 மாணவர்கள் 3-ம் பரிசையும் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பெரிய செங்குந்தர் மண்டபத்தில் நடந்தது. ஜான்சன்ஸ் நிறுவனங்களின் தலைவரும் செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான ஜான்சன்ஸ் நடராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் சிந்தியா பாபு தலைமை வகித்தார். வக்கீல் ஜனார்த்தனன், ஹைடெக் ரோட்டரி சங்கத்தலைவர் பாலாஜி ஆகியோர் வாழ்த்தினார்கள்.

Tags:    

Similar News