உள்ளூர் செய்திகள்

திருவிழாவில் சப்பர பவனி நடைபெற்ற காட்சி.


குலசேகரன்பட்டினம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா

Published On 2023-02-25 07:18 GMT   |   Update On 2023-02-25 07:18 GMT
  • குலசேகரன்பட்டினம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது.
  • திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

உடன்குடி:

உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது. இக்கோவிலில் மாசி மற்றும் மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிவராத்திரி அன்று இரவு 8 மணிக்கு மூன்று முகம் கொண்ட படலம் வீதி உலா வருதல், மறுநாள்மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், திருமஞ்சனக் குடம் எடுத்து சக்தி நிறுத்துதல் நடந்தது.

10-ம் திருநாள் மாலை 6 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதலும், இரவு 12 மணிக்கு மேல் கொடி இறக்கி கொடிமர பூஜை, பைரவர் பூஜை நடந்தது. பேச்சியம்மன் பிரம்மராட்சதை அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அமுதுபடைத்து சிறப்பு தீபாராதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவிழா நாட்களில் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு காலை மற்றும் மாலையில் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் ராமன் பிள்ளை, ஜோதி முருகன் பிள்ளை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News