உள்ளூர் செய்திகள்

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவில் கும்பாபிசேக விழாவையொட்டி இரண்டாவது நாளான இன்று ஐங்கரன் வேள்வி நடைபெற்றது.

அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் கும்பாபிசேக யாக பூஜைகள்

Published On 2022-09-05 10:59 GMT   |   Update On 2022-09-05 10:59 GMT
  • பணிகள் நிறைவடைந்து, வரும் 7-ந் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.
  • விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது.

சேலம்:

சேலம் சூரமங்கலம் அருகே சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயில் உள்ளது. இதன் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது.

தற்போது இந்த பணிகள் நிறைவடைந்து, வரும் 7-ந் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி நேற்று யாக பூஜைகள் தொடங்கின. விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. மாலை திருவிளக்கு வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஐங்கரன் வேள்வி, மண் எடுத்தல், முளையிடுதல், காப்பு அணிவித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் மாலையில் அப்பா பைத்தியம் சுவாமிகள் வேள்வி சாலைக்கு எழுந்தருளி 108 திரவிய வழிபாடு முதல் கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், இசை விண்ணப்பம் உள்ளிட்டவை நடக்கிறது. 7-ந் தேதி காலை 7-40 மணிக்கு நான்காம் கால வேள்வி , காலை 9-45 மணிக்கு விமானத்துக்கு நீர் ஊற்றுதல் விநாயகர், முருகன், சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. இந்த விழாக்களுக்கான ஏற்பாடுகளை முத்துமணிராஜா உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News