உள்ளூர் செய்திகள்

கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

காலபைரவர் கோவிலில் கும்பாபிஷேக விழா

Published On 2023-08-28 09:30 GMT   |   Update On 2023-08-28 09:30 GMT
  • கடந்த 23-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை விழா தொடங்கியது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி மேலகொத்தமங்கலம் கிராமத்தில் காலபைரவர் கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,மகா சங்கல்பம், கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது.

கடந்த 24-ம் தேதி வாஸ்து சாந்தி, பிரவேச பலி,அஷ்டபைரவ ஹோமம், அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

25-ம் தேதி அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம்,மண்டப பூஜை,காலபைரவர் மூல மந்திர ஹோமம், முதற்கால பூர்ணஹீதி, தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து 26-ம் தேதி 2-ம் கால யாகசாலை பூஜை,மண்டப பூஜை,கால பைரவர் மகா மந்திர ஹோமம், காயத்ரி ஹோமம், சோம பூஜை, அஷ்ட பைரவர் சாந்தி ஹோமம், கன்யா பூஜை, வடுகபூஜை, சுமங்கலி பூஜை,லட்சுமி பூஜை,தனபூஜை காலபைரவர் மூலசக்தி ஹோமம் நடைபெற்றது.

கோ பூஜை,பிம்பசுத்தி,ருத்ர ஹோமத்தை தொடர்ந்து காலை 9 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடை பெற்று காலை 9.30 மணிக்கு விமானங்கள் மற்றும் கோபுரங்கள் கும்பாபிஷே கமும், தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடை பெற்றது.

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News