குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது
- வருகிற ஜூன் 1-ந் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது.
- ஊர் பொதுமக்கள் வாத்தியம் முழங்க முளைப்பாரி மற்றும் தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குருந்தமலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.
இதனை தொடர்ந்து வருகிற ஜூன் 1-ந் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. இதை யொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ராஜ கம்பீர விநாயகர், கன்னிமூல விநாயகர், ஆறுமுக வேலவர், விஸ்வநாதர்,விசாலாட்சி அம்மன், ஆதி மூலவர் அகஸ்தீஸ்வரர், ராஜ நாகலிங்கம், பஞ்சலிங்கேஸ்வரர், கன்னிமார், இடும்பன், கடம்பன் வீரபாகு ஆஞ்சநேயர் ஆகிய பரிவார தெய்வகளுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்தது.
குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது.
தொடர்ந்து கோபூஜை, தன பூஜை, அணுக்கை, மகா கணபதி ஹோமம், தீர்த்த சங்கர கணம், அக்னி சங்கர கணம் பூரணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இதை தொடர்ந்து காரமடையில் இருந்து திருமுருக பக்தர்கள் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் தாரை தப்பட்டைகள், செண்டை வாத்தியம் முழங்க முளைப்பாரி மற்றும் தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி மிருதிங்கரணம், அங்கூரார் பணம், ரக்ஷாபந்தனன், கும்ப அலங்காரங்கள் கலா ஆகர்சனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, மண்டப வேதியர்ச்சனை, பூரணாகுதே மற்றும் இரவு உபச்சாரங்கள் தீபாராதனை தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ணயாகசாலை நிகழ்ச்சியை பாலு மற்றும் விவேக் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.