உள்ளூர் செய்திகள் (District)

குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் ஜூன் 1-ந் தேதி கும்பாபிஷேகம்

Published On 2023-03-19 09:48 GMT   |   Update On 2023-03-19 09:48 GMT
  • இந்த கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன.
  • குழந்தை வேலாயுசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துதல் மற்றும் புதிய தேர் செய்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக குருந்த மலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன.

பக்தர்களும் நாள்தோறும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோ விலில் கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 11 வருடங்கள் ஆகி விட்டதால் கும்பா பிஷேக விழா நடத்தவும், புதிய தேர் செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் குருந்தமலை குழந்தை வேலாயுசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துதல் மற்றும் புதிய தேர் செய்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. செயல் அலுவலர் லோகநாதன் தலைமை தாங்கினார்.

முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், கோவை சுகுணா குழும நிர்வாக இயக்குனர் லட்சுமி நாராயணசாமி முன்னிலை வகித்தார்.

ஆலோசனை கூட்டத்தில் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.மேலும், புதிய தேர் செய்வ தற்காக தோலம்பா ளையம் சாலையில் உள்ள பனப்பாளையம் புதூர் பகுதியில் இலுப்பை மரம் தேர்வு செய்யப்பட்டது.

மேலும் கோவிலின் மேற்கு பகுதியில் படிக்கட்டு அமைக்கவும், படிக்கட்டு களை சீரமைக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கோவில் அ ர்ச்சகர்கள், மிராசுதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News