குந்தா அரசு தொடக்கப்பள்ளிக்கு தமிழக அரசின் சிறந்த பள்ளிகளுக்கான விருது
- மஞ்சூர் மின்வாரிய மேல்முகாமில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 10-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்தனர்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல்முகாமில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை மற்றும் தேயிலை தோட்டதொழிலாளர்கள், விவசாயிகளின் குழந்தைகள் படிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 10-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்த நிலையில் தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்களின் தீவிர முயற்சியால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது இப்பள்ளியில் 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான விருது இந்த பள்ளிக்கு அறிவிக்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.
இவ்விருதை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் ஆசிரியை சபீதா, வட்டார கல்வி அலுவலர் வனிதா ஆகியோர் அமைச்சரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற தலைமை ஆசிரியை ெஜயந்தி மற்றும் ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள், மின்வாரியத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.