பூண்டி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி
- மக்கள் கைகளில் தென்னங்குருத்தோலைகளை ஏந்தியவாறு பேராலயத்தை நோக்கி வந்தனர்.
- பக்தர்கள் வைத்திருந்த குருத்தோலைகளை சிலுவை வடிவில் செய்து வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
பூதலூர்:
பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயத்தில் புக குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடைபெற்றது.
இன்று காலை பூண்டி மாதா மக்கள் மன்றத்திலிருந்து ஏராளமான மக்கள் கைகளில் தென்னங் குருத்தோலைகளை ஏந்தியவாறு ஓசன்னா பாடல்களை பாடிய வண்ணம் பூண்டி மாதா பேராலயத்தை நோக்கி வந்தனர்.
குருத்தோலை பவனியை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்து தொடங்கி வைத்து பக்தர்களுடன் குருத்தோலைகளுடன் நடந்து வந்தார்.
குருத்தோலை பவனி பேராலயத்திற்குள் வந்ததும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்குத்தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.
திருப்பலியில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் வைத்திருந்த குருத்தோலைகளை சிலுவை வடிவில் செய்து தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.