உள்ளூர் செய்திகள்

நன்செய் இடையாறு மகாமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

நன்செய் மாரியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை

Published On 2022-08-05 09:12 GMT   |   Update On 2022-08-05 09:12 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
  • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் பால்குடம் அபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாலை மகா மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

குத்துவிளக்கு பூஜையை முன்னிட்டு மகாமாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா மாரியம்மனை தரிசனம் செய்துஅருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News