உள்ளூர் செய்திகள்

தொழிலாளர் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

Published On 2023-05-04 07:09 GMT   |   Update On 2023-05-04 07:09 GMT
  • சேலம்‌ மாவட்ட தொழி லாளர்‌ துறை தொழிலாளர்‌ உதவி ஆய்வாளர்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். ‌
  • இதில்‌ 5 நிறுவனங்களில்‌ முரண்பா டுகள்‌ கண்டறியப்பட்டது.

சேலம்:

சென்னை முதன்மை செயலாளர் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி, சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அறிவு ரைபடியும் சேலம், தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தலைமையில் சேலம் மாவட்ட தொழி லாளர் துறை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

சேலம் மாவட்ட எல்லைக்குட்பட்ட 28 நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009-ன் கீழ் எடைகள் மற்றும் அள வைகளின் கீழ் தயாரிப்பாளர்கள், விற்ப னையாளர்கள் மற்றும் பழுதுபார்ப்பவர்கள் (உரிமம் புதுப்பிக்கப்படா மல் செயல்படுதல் உட்பட) நிறுவனங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதில் 5 நிறுவனங்களில் முரண்பா டுகள் கண்டறியப்பட்டது.

மேலும் 29 மீன் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 12 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. மேலும் சட்டமுறை எடையளவுகள் விதிகள் 2011-ன் கீழ் பாட்டில்கள் மற்றும் சிகரெட் லைட்டர் கடைகள் உள்ளிட்ட 20 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எடை அளவுகள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகள் முத்திரையின்றி பயன்ப டுத்து வதும், சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும், உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்ப டுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆய்வின் போது முரண்பாடுகள் கண்டறி யப்பட்டால் அப ராதம் உள்ளிட்ட நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்று தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தெரிவித்தார்.

Tags:    

Similar News