பொள்ளாச்சியில் போலீஸ்காரரை தாக்கிய தொழிலாளி கைது
- பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
- தலை , உதடு, மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.
கோவை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பத்திரகாளி யம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 31).
இவர் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் பணியில் இருந்த போது ஜோதி நகரில் மூதாட்டி ஒருவர் இறந்து விட்டதாகவும், அவரது மகன் பாபு என்பவர் மது குடித்து விட்டு தகராறு செய்வதாகவும் தகவல் வந்தது. இனையடுத்து போலீஸ்காரர் ராஜபாண்டி தகவல் வந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மாசானி (41) என்பவர் தகாத வார்த்தைகள் பேசி கைகளால் தாக்கினார். இந்த தாக்குதலில் போலீஸ்காரர் ராஜபாண்டிக்கு தலை , உதடு, மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கு இருந்தவர் போலீஸ்காரரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீ சார் போலீஸ்கா ரரை தாக்கிய மாசானியை கைது செய்தனர். அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மாசானியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.