உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடக்கம்

Published On 2023-05-22 09:49 GMT   |   Update On 2023-05-22 09:49 GMT
  • உக்கடம்-ஆத்துப்பாலம் 2-ம் கட்ட மேம்பால பணிகள் விரைவில் தொடங்கும்
  • உக்கடம்-கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை, மே.22-

கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரள மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது.

மேம்பாலம்

இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

முதல் கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

உக்கடம்-கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மேலும், உக்கடம் பஸ் நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

அதே போல் உக்கடம் பஸ் நிலையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளும் 90 சதவீதம் நிறைவடைந்து ள்ளன.

2-ம் கட்ட மேம்பாலம் பணிகள்

இதனிடையே, ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் 2-ம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது.

இந்த மேம்பால நீட்டிப்பு மூலம் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது. உக்க டத்தில் ரூ.233 கோடியில் 1.46 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்கட்ட மேம்பாலம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது.

ஆனால் 2-ம் கட்ட மேம்பால பணிகள் நிலம் கையெகப்படுத்தும் பணி காரணமாக பாதிக்கப்ப ட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் பில்லர் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் அதனை அடுத்து வரும் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் நிலம் கையெகப்படுத்தும் பணிகள் கிடப்பில் உள்ளது. இதன் காரணமாக மேம்பால பணிகள் கடந்த சில மாத காலமாக பாதிக்கப்பட்டுள்ளது.

விரைவில் தொடக்கம்

இதுகுறித்து அரசுதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால த்தில் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் 2 இடங்களில் ஏறு தளமும், 2 இடங்களில் இறங்குதளமும் 5.50 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படுகிறது. 2-ம் கட்ட மேம்பால பணிகளுக்காக நொய்யல் ஆற்றில் பில்லர் அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. 2-ம் கட்ட மேம்பால பணிகள் தொடர்பாக பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் நிலம் கையெகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்றார்.

Tags:    

Similar News