தஞ்சையில் பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை குழுவினர் ஆய்வு
- தஞ்சாவூரில் சரபோஜி மன்னர் கட்டிடம் ரூ. 9.12 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டது.
- தற்போது நடப்பது முடியாட்சி அல்ல குடியாட்சி.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சார்ஜா மாடி கட்டிடம் புதுப்பித்தல் மற்றும் மறு சீரமைக்கும் பணிகள், தர்பார் மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் பலவேறு இடங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர் குழு தலைவர் செல்வப் பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூரில் சரபோஜி மன்னர் கட்டிடம் ரூ. 9.12 கோடி மதிப்பிட்டில், பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் புணரமைப்பு கவர்னர் அறிவிப்பின்படி என எழுதியுள்ளனர்.
பலகை வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் அறிவிக்கவில்லை,தமிழக முதல்வர் தான் அறிவித்தார். அதை மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.
அதிகாரிகள் இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என அறியுறுத்தியுள்ளோம்.
கவர்னர் தமிழக அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை படிப்பவர்தான்.
அவர் சட்டம் தீட்ட முடியாது. அவர் என்றும் தனி தர்பார் நடத்த முடியாது.
தர்பார் நடத்தியவர்கள் எல்லாம் இன்று இல்லை .மராட்டியர்கள், நாயக்கரகள், கிருஷ்ணதேவராயர், சத்ரபதி சிவாஜி போன்றவர்கள் படையெடுத்தனர்.
இப்போது யாரும் படையெடுக்க முடியாது.
தற்போது நடப்பது முடியாட்சி அல்ல குடியாட்சி.எனவே இங்கு மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
எனவே அதில் கவர்னர் பெயரை அகற்ற சொல்லியுள்ளோம்..
பொது தணிக்கை குழு, வழங்கிய பட்டியலின் அடிப்படையில், கடந்த காலங்களில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது.
விரைய செலவு,காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.
உலக வங்கிகளில் வட்டிக்கு தான் கடன் வாங்கிறோம்.
திட்டத்திற்கான பணத்தை எடுத்து செலவு செய்யாமல் இருப்பதை தவிர்க்க ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.