கைத்தறியில் உரிமம் பெற்று விசைத்தறியில் சேலை, வேட்டி நெய்தவர் மீது வழக்கு
- கைத்தறியில் சேலை மற்றும் வேட்டி நெய்வ–தற்கு லைசென்ஸ் பெற்று கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- விசைத்தறியில் சேலை மற்றும் வேட்டி நெய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர் தாமோதரன் மீது வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, உதவி இயக்குனர் மற்றும் உதவி அமலாக்க அலுவலர் (கைத்தறி இதர ஒதுக்கீடு சட்டம்) ஜெயவேல்கனேசன் நேற்று திருச்செங்கோடு வட்டாரத்திற்கு உட்பட்ட கைத்தறியில் சேலை மற்றும் வேட்டி நெய்வ–தற்கு லைசென்ஸ் பெற்று கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புல்லாக்க–வுண்டம்பட்டி, மேட்டுப்பு தூரைச் சேர்ந்த தாமோ தரன்(வயது47). என்பவரது கைத்தறி நெசவு தொழில் கூடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
ஆய்வில் தாமோதரன் கைத்தறியில் சேலை மற்றும் வேட்டி நெய்வதற்கு லைசென்ஸ் பெற்றுவிட்டு விசைத்தறியில் சேலை மற்றும் வேட்டி நெய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர் தாமோதரன் மீது வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வேல கவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தாமோ தரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.