உள்ளூர் செய்திகள்

கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி துவக்கி வைத்தார்.

கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்

Published On 2023-03-02 09:31 GMT   |   Update On 2023-03-02 09:31 GMT
  • மயிலாடுதுறை மாவட்டம் செறுதியூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
  • தடுப்பூசி 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கு போடப்படுகிறது.

தரங்கம்பாடி:

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டம் செறுதியூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு நாகப்பட்டினம் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் விஜயகுமார் வழிகாட்டுதலின்படி உதவி இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரன் தலைமையில் மருத்துவர்கள் அன்பரசன் கவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவர் தர்மராஜ் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் மகாபாரதி முகாமை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இதுவரை இந்த தடுப்பூசி அனைத்து கிராமம் மற்றும் நகர் புறப்பகுதிகளில் போடப்படுகிறது .

இதற்காக சுமார் 40 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள தாகவும் தடுப்பூசி 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கு போடப்படுகிறது.

கால்நடை வளர்ப்போம் தங்களின் அனைத்து கால்நடை இனங்களுக்கும் கட்டாயம் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் கால்நடை களுக்கு வெயில் மட்டும் மணி நேரங்களில் வேகமாக பரவும் கோமாரி நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

தடுப்பூசி போடாமல் இருந்தால் நோய் ஏற்பட்டால் மாடுகளின் வாய் மற்றும் குழம்பு பகுதிகளில் கொப்பளம் மற்றும் புண் ஏற்படும் மாடுகள் தீவனம் உட்கொள்ள முடியாது.

மாடுகளின் பால் உற்பத்தி பாதிக்கப்படும் சினை மாடுகள் கன்று வீழ்ச்சி ஏற்படும் நோயுற்ற மாடுகளின் பால் இளங்கன்றுகள் குடிப்பதால் கன்றுகள் இறப்பு ஏற்படும். பொதுமக்களின் வேலை திறன் பாதிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட மாடுகள் சில நேரம் இறப்புகள் கூட ஏற்படும்.

எனவே கால்நடை வளர்ப்புக்கு தடுப்பூசி போடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ ஜோதிலட்சுமி மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் முருகன், ராஜ் சிவரஞ்சனி, கயல்விழி மற்றும் உதவியாளர்கள் உஷா, மூர்த்தி, ஸ்டீபன் ஆகியோர் கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி அளித்தனர்.

முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி நெடுஞ்செழியன் துணை தலைவர் சவீதா கணேசன் ஆகியோ செய்தனர். முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News