கோவையில் சுமைதூக்கும் தொழிலாளிக்கு கத்திக்குத்து
- ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- வழிவிட்டான் மீது ஏற்கனவே பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உல்லா குடியை சேர்ந்தவர் மச்சராஜா(வயது27).
இவர் கோவை டி.கே. மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் கோவையில் வசித்து வந்தார்.
மச்சராஜாவும், மதுரையை சேர்ந்த வழிவிட்டான் (31), என்ற வாலிபரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர்.இதனால் வழிவிட்டான் அடிக்கடி மச்சராஜா வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது மச்சராஜாவின் மனைவியுடன் வழிவிட்டானுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பேசி வந்ததாகவும் தெரிகிறது. இதனை அறிந்த மச்சராஜா தனது மனைவியை கண்டித்தார்.
இந்தநிலையில், மச்சராஜாவின் மனைவி, தனது கணவரை திடீரென பிரிந்தார். பின்னர் அவர், வழிவிட்டானை 2-வதாக திருமணம் செய்து 2 பேரும் ராமநாதபுரத்தில் வசித்து வருகின்றனர்.இதுதொடர்பாக மச்சராஜாவுக்கும், வழி விட்டானு க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மச்சராஜா டி.கே மார்க்கெ ட்டில் பழ கமிஷன் மண்டியில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வழிவிட்டானுக்கும், மச்சராஜாவுக்கும் இடையே மீண்டும் தகராறு எழுந்தது.
இதில் ஆத்திரமடைந்த வழிவிட்டான் தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால் மச்சராஜாவை வெட்டினார். இதில் அவருக்கு கழுத்து முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மனைவியின் முதல் கணவரை அரிவாளால் வெட்டிய வழிவிட்டானை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். வழிவிட்டான் மீது ஏற்கனவே பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.