கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயனாளிகளுக்கு கடன் உதவி
- 502 பயனாளிகளுக்கு ரூ.3.42 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
- தஞ்சாவூர் பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு செயலர் ஜெகந்நாதன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி, நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி மற்றும் திருமலைசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 502 பயனாளிகளுக்கு ரூ.3.42 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் பெரியசாமி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் பழனீஸ்வரி, தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர் அப்துல் மஜீத், பட்டுக்கோட்டை சரக துணைப்பதிவாளர் சுவாமிநாதன், தஞ்சாவூர் பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.