தென்திருப்பேரையில் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
- ரூ. 47லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
- தென்திருப்பேரை பேரூராட்சி பகுதியில் வட்டார அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகள் பரிசு தொகை வழங்கினார்.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ரூ. 47லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தென்திருப்பேரை பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 10-ம் மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் இரண்டு நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், வட்டார அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கும் பரிசு தொகை வழங்கினார். பின்னர் சலவை தொழிலா ளர்களுக்கு இஸ்திரி பெட்டி வழங்கினார்.
இதை தொடர்ந்து தென்திருப்பேரையில் வருவாய் துறை அலுவலக கட்டிடம் மற்றும் குடியிருப்பையும், மேல கடம்பாவில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணபிரான், திருச்செந்தூர் கோட்டா ச்சியர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், வருவாய் அலுவலர் முத்து ராமன், தென்திருப்பேரை பேரூராட்சி நிர்வாக அதிகாரி ரமேசு பாபு, இளநிலை உதவியாளர் சேக்அகமது,
ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தென்தி ருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார், அவைத் தலை வர் மகரபூஷணம், தென் திருப்பேரை நகரச்செயலாளர் முத்துவீரப்பெருமாள், தென்திருப்பேரை பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஆனந்த், ஆழ்வை நகர செயலாளர் கோபிநாத், நகர அவைத்தலைவர் சுப்பையா, ஆழ்வை மத்திய ஒன்றிய துணை செயலாளர் கோட்டூர் கோயில்துரை, தென்திருப்பேரை பேரூராட்சி துணைத் தலைவர் அமிர்தவள்ளி துரைராஜ், மாவட்ட பிரதிநிதி பாலச்சந்திரன், தி.மு.க. மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செம்பூர் விஜயன், ஒன்றிய தொண்டரணி ராஜேஷ், ஒன்றிய பிரதிநிதி சந்தானமுத்து, கிளை செயலாளர் மாரிமுத்து, கவுன்சிலர்கள் சீதாலெட்சுமி மாரியம்மாள், சண்முகசுந்தரம், வார்டு செயலாளர்கள் மோகன், ஆர்த்திகுமார், கண்ணன், ராகவன், சுடலையாண்டி, சீனிவாசன், முருகன், அன்புத் துரை, கல்லை ராஜேந்திரன், ஞான பிரகாசம், பொன்ராஜ், கடம்பாரவி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லையா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.