உள்ளூர் செய்திகள்

மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

மகளிர் குழுக்களுக்கு கடனுதவி

Published On 2022-12-13 09:14 GMT   |   Update On 2022-12-13 09:14 GMT
  • கறவைமாடு தொழில் கடனுதவியாக ரூ.40 லட்சம் வழங்கப்பட்டது.
  • 62 பெண் விவசாயிகள் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் வங்கி கடனுதவி.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவனத்தில் கல்யாணபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் சார்பில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சார்ந்த பெண் விவசாயிகள் 25 இணை பொறுப்புக் குழுக்களுக்கு ரூ.40 லட்சம் கறவைமாடு கடனுதவிகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் கற்பக விநாயகம் வழங்கினார்.

கருப்பூர், மாத்தூர், சாத்தனூர், பனையூர், வீரசிங்கம்பேட்டை, சின்னகண்டியூர், லிங்கத்தடி புதுத்தெரு போன்ற கிராமங்களில் செயல்பட்டு வரும் 25 ஜே.எல்.ஜி. இணை பொறுப்பு குழுக்களுக்கு கறவைமாடு தொழில் கடனுதவியாக ரூ.40 லட்சம் வழங்கப்பட்டது.

அப்போது வங்கி மேலாளர் கற்பக விநாயகம் பேசும்போது, பெற்ற கடனை தவணை தவறாமல் திரும்ப செலுத்துவதன் மூலம் தொடர்ச்சியான வங்கி கடனுதவிகளை விவசாய மகளிர் குழுக்கள் பெற முடியும்.

கடந்த 8 மாத காலத்தில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சார்ந்த 62 பெண் விவசாயிகள் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டது என்றார்.

முன்னதாக கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் செயலாளர் மற்றும் வினோ–பாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான கருணாமூர்த்தி வரவேற்புரை வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை வங்கி பணியாளர்கள் மற்றும் கவ்டெசி தொண்டு நிறுவன பணியாளர்கள் அஸ்வினி, சுவர்ண ராஜ், சுபாஷினி, கோமதி ஆகியோர் செய்திருந்தனர்.

முடிவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News