உள்ளூர் செய்திகள்

மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ. 2 லட்சம் கடன் உதவியை நகர வங்கி தலைவர் (பொறுப்பு) அன்பரசு வழங்கினார்.

மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் விழா

Published On 2023-05-14 09:04 GMT   |   Update On 2023-05-14 09:04 GMT
  • வங்கியில் நகை கடன் மற்றும் பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
  • மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகர கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருகிறது .

இந்த கூட்டுறவு சங்கத்தில் சுமார் 8000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் நகை கடன் மற்றும் பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

விழாவில் மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டை சேர்ந்த மரிக்கொழுந்து மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி நகர கூட்டுறவுவங்கி தலைவர் (பொறுப்பு) அன்பரசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் கண்ணன், மகாராஜன், நகராட்சி மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் மற்றும் வங்கி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News