உள்ளூர் செய்திகள்

தஞ்சமடைந்த காதல் ஜோடி

வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்

Published On 2022-06-08 07:54 GMT   |   Update On 2022-06-08 07:54 GMT
வடமதுரை பகுதியில் காதல்ஜோடிகள் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்

வடமதுரை :

வேடசந்தூர் அருகே தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் முருகன்(25). இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் லேப் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். திருச்சியை சேர்ந்தவர் பாப்பாத்தி(21). பி.ஏ. பட்டதாரி. தருமத்துப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வரும்போது முருகனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய காதல்ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News