உள்ளூர் செய்திகள்

தஞ்சை- திருச்சி இடையே ரெயில்களில் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்

Published On 2022-11-28 08:25 GMT   |   Update On 2022-11-28 08:25 GMT
  • பூதலூரில் இருந்து தஞ்சைக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
  • பாசஞ்சர் ரெயில்களில் கட்டண குறைப்பு செய்து தர வேண்டும்.

பூதலூர்:

தஞ்சை- திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் முன்ப திவு இல்லாத ரெயில்களில் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்தது போல் குறைந்த கட்டணம் வசூலிக்க ப்பட வேண்டும் என்று ரயில் பயணிகளி டமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

தஞ்சை - திருச்சி வழித்தடத்தில் ஆலக்குடி, பூதலூர், அய்யனாபுரம், சோழகம்பட்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் உள்ளன.

இவை அனைத்தும் கிராமப்புறங்களாகும். கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து ரயில்களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இயக்கப்பட்டு வரும் பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் விரைவு ரெயில்கள் என்று பெயர் மாற்றப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கொரானா காலத்திற்கு முன்பு விரைவு ரயில் பூதலூர் இருந்து தஞ்சைக்கு ரூ.30 ஆக இருந்தது.

சாதாரண பாசஞ்சர் ரயில்களில் பூதலூரில் இருந்து தஞ்சைக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் அவதியநடைந்து உள்ளனர்.

எனவே கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை போல் பாசஞ்சர் ரெயில்களில் கட்டண குறைப்பு செய்து தர வேண்டும் என்று ரயில் பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

இது குறித்து தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் ரயில்வே ஆணையத்திற்கு குரல் எழுப்ப வேண்டும் என்று திருக்காட்டுப்பள்ளி சமூக ஆர்வலர் கண்ணதாசன் கோரியுள்ளார்.

Tags:    

Similar News