உள்ளூர் செய்திகள்

அரசு சார்பில் ரூ.165 கோடி மதிப்பில் 1744 குடியிருப்புகள்

Published On 2023-11-26 08:40 GMT   |   Update On 2023-11-28 06:59 GMT
  • அரசு சார்பில் ரூ.165 கோடி மதிப்பில் 1744 குடியிருப்புகள் வழங்கப்பட்டது.
  • முதல்-அமைச்சருக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.

மதுரை

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக பொருளா தாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கும் வகையில் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டம் பொதுமக்க ளிடையே மிகுந்த வரவேற் பையும், பேராதரவையும் பெற்றுள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கடந்த 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் ஒரு பொதுத்துறை நிறுவனமாக தொடங்கப் பட்டது.

வெறும் குடிசை வீடு களை கான்கிரீட் வீடுகளாக மாற்றிக் கொடுப்பது மட்டும் இந்த வாரியத்தின் நோக்கம் கிடையாது. அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு, நல்ல வாழ்வியல் சூழல், நல்ல குடிநீர், மின்சாரம் தொடங்கி அனைத்து வகை யான வசதிகளும் கிடைக்கச் செய்வதும்தான். இந்த வாரி யத்தின் மூலம் இதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் உத்தரவின் படி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர், "தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதுப்பொழிவுடன் செய லாற்றி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பின்பு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் சார்பாக மதுரை மாவட்டத்தில் கருத்தப் புளியம்பட்டி, ஆத்திக்குளம், ராஜாக்கூர் என 3 திட்டப் பகுதிகளில் மொத்தம் ரூ.165.47 கோடி மதிப்பீட்டில் 1,744 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மேலூர் நகராட்சிக்குட்பட்ட கருத்தப்புளியம்பட்டி திட்டப் பகுதியில் ரூ.84.20 கோடி மதிப்பீட்டில் 912 அடுக்குமாடி குடியிருப்பு களும், மதுரை மாநகராட்சிக் குட்பட்ட ஆத்திக்குளம் திட்டப்பகுதியில் ரூ.30.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 320 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் இராஜாக்கூர் திட்ட பகுதியில் ரூ.50.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 512 அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்கும்.

இதில் கருத்தப்புளி யம்பட்டி திட்டப் பகுதியில் உள்ள ஒவ்வொரு குடியி ருப்பும் 400 சதுர அடி அள விலும், ஆத்திக்குளம் திட்டப்பகுயில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் 374 சதுர அடி அளவிலும், ராஜாக்கூர் திட்டப்பகுயில் உள்ள ஒவ்வொரு குடியி ருப்பும் 406.19 சதுர அடி அளவிலும் கட்டப்பட்டு உள்ளன.

அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளிய லறை, மற்றும் கழிவறை போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆத்திக்கு ளம் திட்டப் பகுதியில் உள்ள குடியி ருப்பில் வசிக்கும் மனோ கரன்- முத்து லட்சுமி கூறுகையில், நாங்கள் இரு வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் கடந்த 20 வருடங்க ளாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வருகிறேன். நாங்கள் குடியி ருந்து வந்த வீடு 10x10 என்ற அளவு முறையில் இருந்த தால் குழந்தைகளுடன் வசிப்பது மிகவும் சிரமமாக இருந்து வந்தது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வருபவர்களும் பல்வேறு வசதிகளுடன் கூடிய வீட்டில் வாழ வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தந்துள்ளார்.

இங்கு அனைத்து வசதி களும் உள்ளன. இதற்காக முதல்-அை அனைத்து அடுக்குமாடி குடியிருப்பு களிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமைய லறை, குளியலறை, மற்றும் கழிவறை போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தினை செயல்ப டுத்திய முதலமைச்சருக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாகவும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வசிக்கும் மக்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றனர்.

ஆத்திக் குளம் திட்டப் பகுதியில் உள்ள குடி யிருப்பில் வசிக்கும் சரவணன் - ஜெய பாரதி தம்ப தியினர் கூறுகை யில், எங்களுக்கு 3 குழந்தை கள் உள்ளனர். நான் சலவை தொழில் செய்து வருகிறேன். நாங்கள் கடந்த 20 வருடங்களாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வருகி றேன். நாங்கள் குடியிருந்த வீடுகள் பழுதடைந்து விட்ட தால், முதலமைச்சர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் சார்பாக அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி தந்துள்ளார். புதிதாக வழங்கப்பட்டு இந்த வீட்டில் போதிய இடவசதியோடு விசாலமாக உள்ளது. நமக்கென்று ஒரு புதிய வீடு என்று நினைக்கும்போது உள்ளூர மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

Tags:    

Similar News