மதுரை நகைக்கடைகளில் கைவரிசை காட்டிய 2 பெண்கள் கைது
- மதுரை நகைக்கடைகளில் கைவரிசை காட்டிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
- நகைக்கடை பஜாருக்கு சென்றனர்.
மதுரை
மதுரை கீழவெளிவீதி கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது59). இவர் தெற்கா வணி மூல வீதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு 2பெண்கள் வந்த னர். அவர்கள் கடையில் ½பவுன் தோடு வாங்குவது போல் நடித்து அதனை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து செல்வராஜ் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.
இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பின் காம ராஜர் சாலை ரெங்கநாயகி தெருவை சேர்ந்த சிவகுமார் (48) என்பவர் தெற்கு சித்திரை வீதியில் நடத்தி வரும் கடையில் 2 பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து ¾பவுன் தோடு திருடிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்தும் கடை உரிமையாளர் சிவக்குமார் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ேமலும் கடை உரிமை யாளர்களும், போலீசாரும் கடையில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 கடைகளிலும் நகையை திருடிச்சென்றது அதே பெண்கள் தான் என தெரியவந்தது.
அவர்கள் யார்? என்று போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே திருடி மாட்டிக் கொள்ளா ததால் தங்களை அடையா ளம் தெரியவில்லை என அந்த திருடிகள் நம்பியுள்ள னர். இதனால் தைரியமாக மீண்டும் கைவரிசை காட்டு வதற்காக நகைக்கடை பஜாருக்கு சென்றனர்.
ஏற்கனவே திருடிய நகைக்கடை வழியாக சென்றபோது கடையின் உரிமையாளர்கள் அவர்களை அடையாளம் கண்டு விரட்டிப்பிடித்தனர். பின்னர் அவர்களை விளக்குத்தூண் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணை யில், அவர்கள் ஒத்தக்கடை அய்யப்பன் நகர் 4-வது தெருவை சேர்ந்த செல்லம் மகள் தரணி (32), சக்கரா நகரை சேர்ந்த ஜெகதீஷ குமார் மனைவி சந்தியா (27) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.